நோக்கு

அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், நலனோம்பல் என்பவற்றை ஒழுங்கு செய்து கொடுத்தல்.

செயல்

வேலை செய்யும் இடங்களில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், நலனோம்பல் என்பவற்றை ஒழுங்கு செய்வதைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்பொருட்டு வேலைகளோடு தொடர்புடைய அனைத்துவிதமான விபத்துக்களைத் தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் கல்வி, பயிற்சியளித்தல், ஆய்வு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதன் மூலம் வலுவுள்ளதாக்குதல்.

எமது விழுமியங்கள்

  • ஏற்புடைத்தன்மை - வேலை செய்கின்ற அனைத்து இடங்களிலும் தொழில் பாதுகாப்பையும் சுகாதார நிலையையும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்கும் மதியுரைகளை வழங்குவது எமது சேவை இலக்காக இருக்கின்றது.
  • தரம் - வேலை செய்கின்ற அனைத்து இடங்களிலும் உங்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்குமான உயர்ந்த விஞ்ஞானத்தையும் அத்துடன் மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் செலவுக்கு ஏற்ற பெறுபேறுகளைத் தருவதுமான தீர்வுகளையும்  நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். மேலும் நீங்கள் அந்த சிறப்பம்சங்களைப் பெறும்வரைக்கும் தொடர்ச்சியாக ஆய்வு, மதிப்பீடு, மேம்படுத்தல் என்பவற்றை மேற்கொள்கின்றோம்.
  • கூட்டுச் செயற்பாடு - இலங்கையில் தொழிலாளர் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுடன் இணைந்த அரச நிறுவனமான நாம் பல்தேசிய மற்றும் தேசிய கைத்தொழில்கள், தொழில் தருநர் மற்றும் ஊழியர் அமைப்புகள், சர்வதேச முகவர் நிலையங்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்சார் பிரசைகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றோம்.
  • அணுகுமுறை - அக்கறை காட்டுகின்ற அனைவருக்கும் இலத்திரனியல் அணுகுமுறையின் ஊடாக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • செயலாற்றுகை - எமது சேவை விஞ்ஞான அடிப்படையைக் கொண்டுள்ள அதேவேளை பெறுபேறுகளை முதன்மையாகக்கொண்ட சேவையாகும்.
  • பொறுப்பு - எமது சேவை தற்பொழுது இனம் கண்டுள்ள தொழில் பாதுகாப்பையும் சுகாதார சிக்கல்களையும் தீர்ப்பதற்கு மையப்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் கைத்தொழில்களில் எதிர்கால முன்னேற்றத்தை அவற்றின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உபாய முறையிலான நோக்கங்களும் குறிக்கோள்களும்

  • தொழில் தருநர்களினதும் ஊழியர்களினதும் தொழில் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தன்மையைக் கவனத்திற்கொண்டு தொழில் தருநர்களினதும் ஊழியர்களினதும் வேலை செய்யும் சூழல் தொடர்பில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தேசிய கொள்கையைத் தயாரிக்கும்போது அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் திடீர்விபத்துக்களையும் அழுத்தங்களையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளைப்பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளில் புலனாய்வு கற்கை நிகழ்ச்சிகள், ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகள் நடத்துதல் என்பவற்றைப் பொறுப்பேற்றல் மற்றும் அவற்றிற்கு உதவுதல்.
  • உபகரணங்கள், தீங்குபயக்கும் பொருட்கள், பௌதிக, இராசயன அல்லது உயிரியல் காரணிகளை சரியானமுறையில் பயனபடுத்துதல் மற்றும் ஏனைய ஆபத்துகள் தொடர்பான மதியுரை சேவைகளை எந்தவொரு நிறுவனத்திற்கு அல்லது நபருக்கு வழங்குதல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றியும் அவற்றோடு சம்பந்தபப்பட்ட விடயங்கள் பற்றியும் அறிவு பெற விரும்புகின்ற ஊழியர்களுக்கு, குடியிருப்பாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, ஏனைய நபர்களுக்கு இலங்கையில் அல்லது வெளிநாடொன்றில் ஏதேனும் நிறுவனமொன்றின் அல்லது பல்கலைக்கழகமொன்றின் உதவியைப் பெற்றுக்கொண்டு கல்வியை வழங்குதல் உரிய பயிற்சியளித்தல் மற்றும் அத்தகைய கல்வி அல்லது பயிற்சி முடிவடைகின்றபோது சான்றிதழ் அல்லது டிப்ளோமா வழங்குதல்.
  • உபகரணங்கள், ஆபத்தான பொருட்கள், பௌதிக, இராசயன, உயிரியல் காரணிகள் என்பவற்றைச் சரியாகப பயன்படுத்துதல் அல்லது உற்பத்தி செய்தல் மற்றும் உளவியல் சமூக இடர்களையும் அறிந்துகொள்கின்ற இடர்களையும் தவிர்த்துக்கொள்வதற்கு உரிய சேவைகளை வழங்குதல்.
    • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தரங்கள், குறியீடுகள், செயல், வழிகாட்டல் என்பவை தொடர்பாக சட்டரீதியான தேவைகள்பற்றி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதல்.
    • வெளிப்பபடுத்தவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள அல்லது வரையறுக்கப்பட்டுள்ள அல்லது மேற்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ள வேலைகள், செயல்கள், பொருட்கள் மற்றும் காரணிகள் என்பவற்றை மதிப்பீடு செய்தலும் தீர்மானித்தலும்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்தல், தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் வெளிப்படுத்துதல் போன்றவற்றை செய்தல் அல்லது ஏனையோரின் உதவியைப் பெற்றுக்கொள்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட மகாநாடுகள், கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தாடல்கள் அல்லது அதற்கு சமமான ஏனைய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் அல்லது அவற்றிற்கு அனுசரணையளித்தல் மற்றும் அது தொடர்பான கட்டுரைகளை வெளியிடல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கிடையில் கருத்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைத்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் சம்பந்தப்பட்ட நடைமுறைச் செயற்பாடுகளை மேம்படுத்தி விரிவாக்குவதற்காக நூலகங்களையும் ஆய்வுகூடங்களையும் அமைத்து நடாத்துதல்.
  • ஆய்வு மற்றும் விசேட ஆராய்ச்சிக்கூடங்களை விருத்தி செய்தல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது அத்துறையில் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து தொடர்புகளையும் வலைப்பின்னல்களையும் அமைத்துக் கொள்தல் மற்றும்,
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான துறைகளில் தேசிய தரங்களை அமைத்தல் என்பவையாகும்.